ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
ஸ்தோத்திரம் துதி உமக்கே
பாத்திரரே உம்மை துதித்திடுவேன்
பாரில் ஜீவனுள்ள நாளெல்லாம்
1. நானுண்டு உனக்கு நானிலத்தில் என்று
நயமாய் பேசி அழைத்தீரென்னை
நாளும் என் குறைகள் போக்கிட உமது
நல் கிருபை எனக்களித்ததினால்
2. வெள்ளம் போல் சோதனை
புரண்டு வந்திடினும்
நல்லதோர் புகலிடம் ஆகினீரே
காற்றுக்கு ஒதுக்காய் வறண்ட நிலமதில்
கன்மலையாய் என்றும் இருப்பதினால்
3. ஓடுவோர் அநேகர் பந்தய சாலையில்
ஒருவன் பந்தய பொருள் பெறுவான்
பெற்றுக் கொள்ள நமக்கும் அனுதினமும்
வற்றாத கிருபையை அளித்ததினால்
4. தாழ்வினின்று உயர்த்தி நற்கிரியையுடன்
வாழ்வினில் தொடங்கி அருள் புரிந்தீர்
முற்றும் முடியவே நடத்தி உம்முன்பு
நிறுத்திட வல்லவரானதினால்
5. ஜீவனின் ஆவியை பகர்ந்து நீர்எமது
ஜீவியமதையே மாற்றுகிறீர்
பூவினில் முதற்பலனாகவே எழுப்பிட
பூரண பாதை நீர் நடத்துவதால்
HOME
More Songs